'உலக நலனுக்காக இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்'; ஆர்.எஸ்.எஸ். தலைவர்..!
The RSS chief says India must become a Vishwaguru for the welfare of the world
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், 'உலக நலனுக்காக இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும் 'என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவில் சங்கத்தின் முயற்சிகளும், அந்தந்த நாடுகளில் உள்ள ஹிந்து சுயம்சேவக் சங்கங்களின் முயற்சிகளும் ஒரே மாதிரியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சேவை பல காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது என்றும், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பிறகு, சேவை செய்ய விரும்பும் மக்களின் கூட்டத்தை அதிகமாக பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், அவர்கள் கைகளைக் கூப்பி, பெரிய புன்னகையுடன் வீடு வீடாகச் சென்று, 'உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று கேட்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களை மீண்டும் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால், அந்தச் சேவை பிற்காலத்தில் ஒரு வெகுமதியை எதிர்பார்த்து செய்யப்படுகிது என்று கூறியுள்ளார். அது உண்மையான சேவை அல்ல என்றும், அது ஒரு கொடுக்கல் வாங்கல். என்று தெரிவித்துள்ளார்.
உலக நலனுக்காக இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும். ஆனால், இது ஒரே இரவில் நடக்கும் ஒன்றல்ல. இதற்கு கடின உழைப்பு தேவை. இந்த கடின உழைப்பு பல்வேறு வழிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம் ஹிந்து சமூகத்தை ஒழுங்கமைப்பதைத் தாண்டியது என்றும், தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும். அதைக் கட்டுப்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தொழில்நுட்பம் ஒருபோதும் மனிதகுலத்தின் எஜமானராக மாறக்கூடாது எனவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலக நலனை பாதுகாக்க வேண்டும் என்று மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
English Summary
The RSS chief says India must become a Vishwaguru for the welfare of the world