'ஆட்சியை விட்டு போகும் போதாவது, பொங்கல் பரிசாக 05 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்'; திமுக அரசுக்கு கோரிக்கை வைத்த இ.பி.எஸ்..!
EPS has requested the DMK government to provide Rs 5000 as a Pongal gift
திமுக ஆட்சியை விட்டு போகும் போதாவது, மக்களை புரிந்து கொண்டு பொங்கல் பரிசாக இந்தாண்டு 05 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம், தையலூரில் பிரசாரம் மேற்கொண்ட இபிஎஸ்பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது:
தீயசக்தி திமுகவை வேரோடு அழிக்கத்தான் எம்ஜிஆர் கட்சி அத்தொடங்கினர். அதுவே அதிமுக லட்சியம் என்று கூறியுள்ளார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 05 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் 95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மத்திய அரசு, அதிமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், அதிமுக அளித்த கோரிக்கைப்படி 100 நாள் வேலை நாட்களை மத்திய அரசு 125 ஆக அதிகரித்துள்ளது. திமுக, தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, 100 நாட்கள் வேலை திட்டத்தின் நாட்கள் அதிகரிக்கப்படவில்லை. முறையாக சம்பளம் வழங்கவில்லை. தொடர்ந்து வேலை வழங்கவில்லை என்று தொடர்ச்சியாக விமர்சித்துள்ளார்.

மேலும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பணி நாட்கள் 150 நாட்களாக அதிகரிக்கப்படுவதோடு, சம்பளம் அதிகரிக்கப்பட்டு, தடையில்லாமல் பணி வழங்கப்படும் எனவும், அதிமுக அரசு தான் மக்களை காக்கும் அரசு என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுத்தோம். அப்போது 05 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார். ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டாவது, ஆட்சி முடியும் நேரத்தில் மக்களை புரிந்து கொண்டு பொங்கல் பரிசாக 05 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், திமுக இனிமேல் ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆட்சியை விட்டு போகும் போதாவது மக்கள் வாழ்த்தட்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
EPS has requested the DMK government to provide Rs 5000 as a Pongal gift