'நேரு மக்களின் பணத்தை பயன்படுத்தி அயோத்தியில் பாபர் மசூதியை கட்ட விரும்பினார்': ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு..! - Seithipunal
Seithipunal


சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150-வது பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் ஒற்றுமை அணிவகுப்பு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வதோதரா அருகே உள்ள சாத்லி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் பிரதமர் நேரு மக்களின் பணத்தை பயன்படுத்தி அயோத்தியில் பாபர் மசூதியை கட்ட விரும்பியதாகவும், ஆனால், அவரின் திட்டம் வெற்றி பெற சர்தார் வல்லபாய் படேல் அனுமதிக்கவில்லை  என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், படேல் பிரதமராக வந்திருக்கலாம். ஆனால் அவர் தன் வாழ்க்கையில் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை என்பதால், காந்தியின் ஆலோசனையின் பேரில் படேல் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அதனால் தான் 1946-இல் நேரு காங்கிரஸ் தலைவரானார் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது காங்கிரசில் பெரும்பான்மையோர் படேலை முன் மொழிந்தனர். படேல் மறைவுக்கு பின், அவருக்கு நினைவுச் சின்னம் கட்ட மக்களால் சேகரிக்கப்பட்ட நிதியை கிணறுகள், சாலைகள் அமைக்க பயன்படுத்தலாம் என்றும், அவர் ஒரு விவசாயிகளின் தலைவர் என்று நேரு காரணம் கூறினார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை கட்டுவது அரசின் பொறுப்பு. ஆனால், நினைவு சின்னம் கட்டுவதற்கான நிதியை பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை எவ்வளவு அபத்தமானது என்றும், நேரு தனக்குதானே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டார் என்றும், ஆனால் ஏன் படேலுக்கு அது வழங்கப்படவில்லை..? என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமாக படேல் புகழை நிலைநிறுத்தியதில் பிரதமர் மோடியின் பங்கு முக்கியமானது. சிலர் படேல் புகழை மறைக்கவும், அழிக்கவும் முயன்றனர். ஆனால் பாஜ ஆட்சியில் இருக்கும் வரை அவர்களின் எண்ணம் ஈடேறாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajnath Singhs sensational statement that Nehru wanted to build Babri Masjid in Ayodhya using peoples money


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->