20 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் மாத ஊதியத்தில் மூன்று சக்கர வாகனம் வாங்கிக்கொடுத்த இராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், " இராஜபாளையம் தொகுதியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணாபுரம் ஊராட்சி தாட்கோ காலனியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரின் முதல் மாத ஊதியத்திலிருந்து 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனத்தை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று (11.06.2021) மாலை வழங்கினார். 

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளி என மாற்றி அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அவர்களின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய பெருமை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களையை சாரும் எனவும், அவர் வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்கு தனிக்கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட செயல்படுவர் எனக்கூறினார்.

மேலும் இராஜபாளையம் தொகுதியில் தான் இரண்டாவது முறையாக சட்ட மன்ற உறுப்பினராக தேர்த்தெடுக்கப்பட்டவுடன் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முதல் மாத ஊதியத்திலிருந்து 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கியுள்ளேன் எனக்கூறினார். 

மேலும் மாற்றுத்திறனாளிகள் அவர்களின் வளர்ச்சிக்கு தொழில்தொடங்கவோ அல்லது உதவித்தொகை பெறவும் தான் நேரடியாக அலுவலகத்திற்கே வந்து ஆவண செய்து பெற்றுதருவதாகவும்  மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்கு  தமிழக முதல்வர் அவர்களும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களும் தொழில்த்துறை அமைச்சர் அவர்களும் MP அவர்களும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும் உறுதுணையாக இருப்போம் எனக்கூறினார். 

இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் கிளைச்செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajapalayam DMK MLA Thangapandiyan Give 3 Wheel Vehicle for 20 Physically Challenged Persons 11 June 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal