அடிப்படை கட்டமைப்பை மாற்றவே நான் வந்துள்ளேன் - ஈரோட்டில் ராகுல் காந்தி உருக்கமான பேச்சு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசலூர் ஓடாநிலை கிராமத்தில் நெசவாளர்களிடையே உரையாற்ற ராகுல் காந்தி, " இந்தியாவினுடைய விவசாயிகளையும், நெசவாளர்களையும், உழைக்கும் வர்க்கத்தையும் இந்திய நாட்டின் பெருமையாக பார்க்கிறேன். 

அடிப்படை கட்டமைப்பு உறுதியாக இல்லை என்றால், எதுவுமே உறுதியாக இருக்காது. நான் அந்த உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக உங்களை நம்புகின்றேன். அந்த நம்பிக்கையே உங்களின் முன்னால் என்னை கொண்டு வந்துள்ளது. நானும் உங்களின் முன்பு நின்று கொண்டிருக்கிறேன். 

இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்றால், உங்களைப் போன்று உங்களுடைய கைகளால் செய்யப்பட்ட பொருட்களை உருவாக்கி, அதனை இந்த உலகிற்கு தரக்கூடிய நபர்களால் தான் மீண்டும் உலகம் கட்டமைக்கப்படும். 

ஒரு நாடாக, ஒரு அரசாக பார்க்கும்பொழுது இந்தியா உங்களை போன்ற விவசாயிகள் மற்றும் நெசவாளர்களின் கைகளில் இருக்கிறது. இந்தியாவிற்காக நெசவாளர்கள் ஆகிய நீங்கள் அதிகளவு பாடுபட்டுள்ளீர்கள். உங்களின் கருத்துக்களும் நான் கேட்க ஆவலோடு காத்துகொண்டு உள்ளேன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Election Campaign Speech Erode 24 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal