தமிழகத்திற்கு வருகை தரும் ராகுல் காந்தி - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என்று நான்குமுனைப் போட்டி நிலவி வருகிறது.

இதில் திமுக கூட்டணியில், விசிக, காங்கிரஸ், உள்ளிட்ட சில கட்சிகளும், அதிமுக கூட்டணியில், தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளும், பாஜகவுடன், பாமக உள்ளிட்ட சில கட்சிகளும் கூட்டணியில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண உள்ளது.

இதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி அடுத்த வாரம் தேர்தல் பரப்புரைக்காக தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ragul gandhi come in tamilnadu for election campaighn


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->