கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: பலியான தமிழக தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதல்வர் விஜய் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


கத்தாரின் முக்கிய தொழில்துறை நகரமான ராஸ் லபான் பகுதியில் அமைந்துள்ள பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் அங்கு பணியில் இருந்த 12 இந்தியர்கள் உட்பட மொத்தம் 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இந்தியர்களில் மூன்று தொழிலாளர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சோகச் சம்பவம் அவர்களது கிராமங்களிலும் உறவினர்களிடையேயும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் பலியான திருநெல்வேலியைச் சேர்ந்த பபித், சுவின் மற்றும் சஜித்குமார் ஆகிய மூவரின் மறைவு குறித்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது ஆழந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டில் வாழ்வாதாரம் தேடிச் சென்ற தமிழ் இளைஞர்கள் தங்களின் இன்னுயிரை இழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும் பெருந்துயரமும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிள்ளைகளை இழந்து தவிக்கும் அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அவசரத் தேவைகளையும் அவர்களது எதிர்காலச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, கத்தார் ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு சார்பில் தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து நிர்வாக மற்றும் சட்டப்பூர்வ உதவிகளையும் உடனடியாகச் செய்யுமாறு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசுவுக்கு அவர் துரித உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெளிநாட்டில் உயிரிழந்த இந்தத் தொழிலாளர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களை எவ்விதத் தாமதமும் இன்றிப் பாதுகாப்புடன் தமிழகத்திற்குக் கொண்டு வர மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து மாநில அரசு தேவையான அனைத்து தூதரக ரீதியிலான அவசர நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் விஜய் தனது இரங்கல் செய்தியில் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Qatar Gas Plant Explosion CM Joseph Vijay Announces Ten Lakh Rupees Financial Aid for Families of Deceased Tamil Workers


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->