அற்ப பணத்திற்கு பேய் போல செயல்பட்ட தனியார் மருத்துவமனை.. புதுக்கோட்டையில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியைச் சார்ந்த ஜீவானந்தம் (வயது 66). இவர் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜீவானந்தம் தற்போது கொத்தமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், நேற்று காலை நெஞ்சு வலிப்பதாக குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து அரசு மருத்துவமனையிலும், பின்னர் புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் ரூபாய் 36 ஆயிரம் மதிப்பிலான ஊசி அவருக்கு போடப்பட்டதாக உறவினர்கள் கூறும் நிலையில், ஜீவானந்தம் நல்லபடியாக பேசி கொண்டு இருந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று இரவு ஜீவானந்தத்தின் உடல்நிலை மிகவும் மோசமாகவே, உறவினர்களிடத்தில் ஜீவானந்தத்தின் உடல் மோசமாக இருப்பதாகவும், அவரை உயர் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்ப வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் இருந்து அன்புவதற்கு முன்னதாக பாக்கி தொகை ரூ.12 ஆயிரத்தை செலுத்தக்கூறி தெரிவித்த நிலையில், ஜீவானந்தத்தின் உறவினர்களும் பணத்தை செலுத்தியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டதும் ஜீவானந்தம் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடவே, காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudukkottai Pvt Hospital Says False Statement to Patient Relation when to get Money


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->