கீழுள்ள புகைப்படத்தில் உள்ள நபரின் இணையப்பக்கத்தில் இருந்து அழைப்பு வருகிறதா?.. மக்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரைஞானம்பட்டியை சார்ந்த பெண்மணி சந்தியா. இவருக்கு இங்கிலாந்தை சார்ந்த டேனி என்ற நபரின் முகநூலில் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. அதில்தான் லண்டனில் இருக்கும் நபர் என்றும், பிறருக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனையடுத்து சந்தியா தனது சகோதரரின் அலைபேசியில் தொடர்பு கொண்டு, இது குறித்து கூறியுள்ளார். இந்நிலையில், 40 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் அவருக்கு பார்சலில் அனுப்பி வைப்பதாகவும், இதனை வைத்து நலமுடன் வாழுமாறும் கூறியுள்ளார். 

இதனையடுத்து டெல்லி விமான நிலைய சுங்க துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்த நபர் ஒருவர், லண்டனில் இருந்து பார்சல் வந்துள்ளது என்றும், சுங்கவரியை கட்டினால் வீட்டிற்கு பார்சல் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனை நம்பிய பெண்ணின் அண்ணன் ஜோதி ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை சுங்க அதிகாரி என தெரிவித்தவரின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இதன்பின்னர் அந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, தற்போது புதுக்கோட்டை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudukkottai man cheated by England fake ID


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->