7.5% இடஒதுக்கீடு யாரின் சாதனை...? சட்டசபையில் தி.மு.க.-அ.தி.மு.க. மோதல்...! - சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை
Whose achievement 7point5 reservation DMK AIADMK clash assembly Speaker Appavu warns
தமிழக சட்டசபையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீடு விவகாரம் தீவிர அரசியல் சூட்டை கிளப்பியது. தி.மு.க.–அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் வெடித்து, அவை முழுவதும் காரசாரமான விவாதத்தால் குலுங்கியது.
மேலும், அ.தி.மு.க. சார்பில் பேசிய கே.பி.முனுசாமி, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை உருவாக்கிய 7.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தான் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. ஆளுநர் மாளிகை முன் நடத்திய போராட்டங்களின் பலனாகவே இந்த இடஒதுக்கீடு சட்ட வடிவம் பெற்றது என்று தெரிவித்தார்.
இந்த விவாதம் தீவிரமடைந்ததால் உறுப்பினர்கள் தங்கள் இடங்களை விட்டு எழுந்து பேச முயன்றனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, “இடத்திற்கு செல்லுங்கள், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது மீண்டும் எழுந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்கிறார். 7.5% இடஒதுக்கீட்டிற்காக தி.மு.க. பேசியதற்கான ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்” என சவால் விடுத்ததால், அவை முழுவதும் அரசியல் பரபரப்பு அதிகரித்தது.
English Summary
Whose achievement 7point5 reservation DMK AIADMK clash assembly Speaker Appavu warns