வர்த்தக ஒப்பந்த அதிரடி: வரி குறைப்பு! ரஷியா எண்ணெய் இறக்குமதி சரிவு...வெனிசுலா நோக்கி இந்தியா...! - Seithipunal
Seithipunal


இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் புதிய திருப்பமாக முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் அண்மையில் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிக வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.

மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அபராதமாக விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியா ரஷியாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை கட்டுப்படுத்தும் என அமெரிக்க தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வெனிசுலா கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.இந்த மாற்றங்களின் தாக்கமாக, ரஷியாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி கணிசமாக சரிந்துள்ளது.

கடந்த மாதம் ரஷியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு 2.86 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 40.48 சதவீத வீழ்ச்சியாகும். அப்போது இந்த அளவு 4.81 பில்லியன் டாலராக இருந்தது.

மேலும் ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 80 சதவீதம் கச்சா எண்ணெயே ஆகும். தற்போது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெய் கொள்முதலைக் குறைத்து, அதற்குப் பதிலாக மலிவான வெனிசுலா எண்ணெயை தேர்வு செய்ய முனைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி,அமெரிக்க தடைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு, வெனிசுலா கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கிய முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trade deal action Tax cuts Russian oil imports decline India turns Venezuela


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->