பஞ்சாபில் பரபரப்பு; மற்றொரு ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன், அமிர்தசரஸில் உள்ள வால்டோஹா கிராமத்தில், திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்ற ஆம் ஆத்மி தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஜார்மால் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மற்றுமொரு ஆம் ஆத்மி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஹர்பிந்தர் சிங் என்ற ஆம் ஆத்தி கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் திருமண விழாவிற்கு சென்றபோது அடையாளம் தெரியாத 03 நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹர்பிந்தர் சிங், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த உறுப்பினர் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர் லால்ஜித் சிங் புல்லாருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

இவரின் கொலைக்கு மர்ம நபர்கள் ஏ.கே.47 துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது, சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து இரண்டு வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டின் போது ஹர்பிந்தர் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடைய உறவினர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்து்ளளனர்.

இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another Aam Aadmi Party panchayat leader shot dead in Punjab


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->