புதுமணப்பெண் மாயம்.. கணவர் காவல் நிலையத்தில் புகார்.. கண்ணீரில் உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


புதுமண பெண் திருமணமான 6 மாதத்தில் மாயமாக, கணவர் காவல் நிலையத்தில் மனைவியை கண்டறிந்து தரக்கூறி புகார் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, நற்பவளக்குடி வடக்கு கிராமத்தை சார்ந்தவர் கருப்பையா. இவரது மகன் செல்வகுமார் (வயது 35). கூத்தாடிவயல் பகுதியை சார்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் கவிதா (வயது 25). 

இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி காலை நேரத்தில் வயல் பகுதிக்கு சென்று வருவதாக கூறிய கவிதா, வயல் வெளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், கவிதாவின் நண்பர்கள் ஆகியோரிடம் அவரை காணவில்லை அங்கு வந்தாரா? என விசாரித்துள்ளனர். 

கவிதா எங்கு சென்றார் என்ற தகவல் இல்லை என்பதால், அறந்தாங்கி காவல் நிலையத்தில் கணவர் செல்வகுமார் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், மாயமாகியுள்ள கவிதாவை தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Aranthangi Woman Missing Completed Marriage Before 6 Months Police Investigation


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal