பொதுத்தேர்வு முறையில் திடீர் மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.!
Public exam rules changed minister anbil Mahesh Poyyamozhi
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23,747 பேரும் என மொத்தம் 8,75,050 பேர் எழுதி வருகின்றனர். இதனையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3225 இடங்களில் இதற்காக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வான ஆங்கில மொழித்தேர்வை 49,000 மாணவர்களும், தமிழ் மொழி தேர்வை 50,000 மாணவர்கள் எழுதவில்லை. இவ்வளவு மாணவர்கள் தேர்வு இல்லாததால் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேற்று கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் பேசியவர் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு திட்டம் எதுவும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பள்ளிகளில் குறைந்தபட்ச வருகை இருந்தால் போதும் தேர்வு எழுத முடியும் என்ற நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆண்டிற்கு மூன்று நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்ற முறை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்த தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கவும் மாணவர்களை தேர்வு எழுத வைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Public exam rules changed minister anbil Mahesh Poyyamozhi