''ராகுல் எங்கள் தலைவர்; தோல்வி குறித்து அவர் கவலை கொள்ளவில்லை: அவருக்கு ஊக்கம் கொடுத்துள்ளோம்''; கர்நாடக முதல்வர் சித்தராமையா..!
Karnataka Chief Minister Siddaramaiah says we have encouraged Rahul
கர்நாடக முதல்வர் சித்தராமையா டெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். மாநிலத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் மத்திய அரசின் உதவியை நாடி அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமை (இன்று) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அமைச்சரவை மாற்றம் குறித்து எங்கள் அமைச்சர்கள் யாரும் எதுவும் பேசவில்லை என்றும், பிரதமர் மோடியை இன்று நான் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், பிஹார் தேர்தல் காரணமாக அவரை சந்திக்க முடியவில்லை எனவும், வரும் திங்கட்கிழமை அன்று அவரை சந்திப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் ராகுல் காந்தியை சந்தித்து, பீஹார் தேர்தல் குறித்து அவருடன் பேசியதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். மேலும், ராகுல்எங்கள் தலைவர். இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஊக்கம் கொடுத்தாகவும், அது குறித்து அவர் கவலை கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன், ராகுலுக்கு உற்சாகத்தை இழக்க வேண்டாம் என ஆறுதல் தெரிவித்ததாகவும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் நவம்பரில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா மென்னதாக தெரிவித்திருந்தார். ஏனெனில், கர்நாடகாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். அப்போது முதல்வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் மேலிடம் துணை முதல்வர் பதவி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Karnataka Chief Minister Siddaramaiah says we have encouraged Rahul