போராட்டம்! கொள்ளிடம் ஆற்றில் இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம்...!
Protest Women wade into waist deep water Kollidam river and chant slogans
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் அழகிரிபுரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு ரூ.7 கோடியில் கட்டிய தடுப்பணைகாட்டப்பட்டது. இது தற்போது சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சலவை தொழில் செய்து வந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில், சலவை தொழிலாளர்களுக்கு தடுப்பு சுவர், படித்துறை கட்டி தர கோரியும், காவிரியுடன் அய்யாற்றை இணைக்க வலியுறுத்தியும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும், இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் கோஷம் எழுப்பினார்கள். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான சலவை தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நீடித்தது.
English Summary
Protest Women wade into waist deep water Kollidam river and chant slogans