தனியார் வசமாகும் 350 ஏக்கர் பஞ்சமி நிலம்.. தமிழக அரசை கண்டித்து மக்கள் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தை அடுத்த அளவந்தான்குளம் கிராமத்தில் வசிக்கும் ஹரிஜன உழவர் சமுதாய மக்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் 350 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை தற்பொழுது மூன்று கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை அப்பகுதி மக்கள் வளர்த்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கோட்டை, நெல்லை திருத்தான், அளவந்தான்குளம் ஆகிய 3 மூன்று கிராமத்தினருக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிணறு அமைந்துள்ளது.

இந்த நிலையில் கங்கைகொண்டான் சிப்காட் புதிதாக தொடங்கப்பட உள்ளதால் தனியார் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்காக 1300 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 350 ஏக்கர் பஞ்சமி நிலமும் கையகப்படுத்தப்படும் என ஹரிஜன மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் இந்த பஞ்சமி நில மேச்சலை நம்பி 5 முதல் 10 கால்நடைகள் வளர்க்கின்றனர்.

இந்த கால்நடைகள் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளவந்தான்குளம் கிராமத்தில் 4 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கும் கிராம சபை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் கிராம மக்களின் மேய்ச்சல் நிலத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கும் முயற்சியை எதிர்த்து கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

மேலும் கிராமசபை கூட்டம் நடக்க இருந்த இடத்தில் அரசுக்கு எதிராக போஸ்டர் அடித்து ஒட்டியதோடு கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹரிஜன மக்கள் பயன்பெறும் வகையில் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protest against TNgovt for giving 350 acres Panchami land to private


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->