தமிழகத்தில் இன்று முதல் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்..! - Seithipunal
Seithipunal


 தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் உருமாறிய ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அறிவித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவற்றை செயல்பட அனுமதி இல்லை. மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய பணிகளான பல் விநியோகம், தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். 

இந்நிலையில், வார இறுதி நாட்களில் வழிபாடு தளங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prohibition of worship in places of worship


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->