அரசு இணையதளத்தில் இருந்து நில வரைபடங்களை காணவில்லை! சென்னையில் மட்டும் 26 பகுதிகள்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் 72 நகரங்களின் சிட்டா, பட்டா, நில அளவை வரைபடங்கள் கிடைப்பதில் சிக்கல்!

தமிழக முழுவதும் நில அளவை வரைபடங்களை இ-சேவை மையங்களில் பெரும் திட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் இருந்து நிலம் சம்பந்தமான பட்டா, சிட்டா, நில அளவை வரைபடங்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரப்பதிவுத்துறையின் இணையதளம் பல இடங்களில் சர்வர் வேலை செய்யாததால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பின்னர் அது சரி செய்யப்பட்டு பத்திரப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் இணையதளம் வழியாக நில வரைபடங்களை பொதுமக்கள் பதிவிறக்க முயற்சிக்கும் பொழுது அது இணையதளத்தில் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில் 72 நகரங்களின் நில வரைபடங்கள் காணாமல் போய் உள்ளது.

இதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, உட்பட்ட 16 மாவட்டங்கள் அடங்கும். சென்னையில் மட்டும் 26 பகுதிகளின் நில வரைபடங்கள் மற்றும் சிட்டா பட்டாக்கள் காணாமல் போய் உள்ளன. இதனால் பொதுமக்கள் நிலகளின் பட்டா, சிட்டா சரி பார்ப்பு மற்றும் வரைபடங்கள் பதிவிறக்கம் செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

problem in getting Chitta Patta land size map of 72 cities across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->