தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
Principal arrested under the Pokso Act
பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்னதான் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி குற்றங்களை தடுத்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலில் குற்றங்களும் நாளுக்கு நாள் அது அதிகரித்து கொன்டே செல்கிறது, சமீப காலமாக பள்ளி மாணவிகள் முதல் பெரிய பெண்கள் வரை பாலில் தொல்லையானது அளிக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டல் அளிப்பது தமிழகத்தில் தொடர்கிறது.இந்தநிலையில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 10 வயதுடைய 5-ம் வகுப்பு மாணவி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றார். அப்போது மாணவி வீட்டில் தனது தாயாரிடம் மறுநாள் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். ஏன் என்று கேட்டதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்து சென்று சில்மிஷம் செய்ததாக கூறினார். மேலும் தலைமை ஆசிரியர் மூக்கு மீது அடித்ததில் ரத்தம் வந்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாயார் நேற்று தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, மாணவியிடம் விசாரணை நடத்தியதில் தலைமை ஆசிரியர் சிறுமியை கிள்ளி சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.
English Summary
Principal arrested under the Pokso Act