முன்விரோதம் உயிரிழப்பில் முடிந்தது..! - அரிவாள் கொலை வழக்கில் கணேசனுக்கு ஆயுள் தண்டனை...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே நடந்த கொலை வழக்கில், குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.ஏரல் அகரம் பகுதியைச் சேர்ந்த வீரமணியின் மகன் ஜெயராஜ் (68), 2019-ம் ஆண்டு அகரம் வேதக்கோவில் தெருவில், முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமியின் மகன் கணேசன் (61) என்பவரை ஏரல் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-IIல் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிபதி ப்ரீத்தா, குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி கணேசனுக்கு ஆயுள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி, நீதிமன்றத்தில் உறுதியான வாதம் முன்வைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், மற்றும் விசாரணைக்கு முக்கிய பங்காற்றிய ஏட்டு அரவிந்த் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டி சிறப்புச் சான்றிதழ் வழங்கினார்.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 21 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது காவல்துறையின் திறமையான பணி என மதிப்பிடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Previous enmity ended death Ganesan gets life imprisonment sickle murder case


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->