அதிபர் தப்பியோட்டம்...மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம்! - Seithipunal
Seithipunal


மடகாஸ்கரில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். 

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள  மடகாஸ்கர் நாட்டின் அதிபராக அண்ட்ரே ரஜோலினா செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில் அங்கு , கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய போராட்டம் அதிபர் ரஜோலினாவுக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும் திரும்பியது. ஊழல், வறுமை, மின் தடுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 மேலும், அந்நாட்டு ராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவு அதிபரின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராக திரும்பியது.இந்நிலையில், போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். 

அவர் பிரான்ஸ் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து ராணுவத்தின் கெப்செட் படைப்பிரிவு நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

முன்னதாக பிரான்சின் காலனி ஆதிக்க நாடாக மடகாஸ்கர் இருந்து வந்தது. காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான பின்னும் மடகாஸ்கரில் தனது படைவீரர்களை பிரான்ஸ் நிலை நிறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Presidents escape The protest against the government continues in Madagascar


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->