பரந்தூர் விமான நிலைய பூர்வாங்க பணிகள் தற்காலிக நிறுத்தம்! 1,700 ஏக்கர் நிலம் என்னவாகும்...? - தமிழக அரசின் அடுத்த பிளான் என்ன...?
Preliminary works of Paranthur Airport temporarily halted What happen 1700 acres land What next plan Tamil Nadu government
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் முன்மொழியப்பட்டிருந்த புதிய விமான நிலையத் திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்குப் பதிலாக, மிகப்பெரிய தொழிற்துறை பூங்காவை உருவாக்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பரந்தூ விமான நிலையம்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், பரந்தூரில் சுமார் 5,600 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திலான விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக முதற்கட்டமாக 1,700 ஏக்கர் நிலப்பரப்புகள் கையகப்படுத்தப்பட்டிருந்தன.இந்த திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக, விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய், பரந்தூருக்கு நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்த சூழலில், பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மறுபுறம், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால், தமிழ்நாட்டின் எதிர்கால முதலீடுகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
English Summary
Preliminary works of Paranthur Airport temporarily halted What happen 1700 acres land What next plan Tamil Nadu government