நடுரோட்டில் நின்ற சிமெண்ட் லாரி...தூக்க கலக்கத்தில் மோதிய ஆம்னி பேருந்து...! கோவில்பட்டியில் அதிகாலை கோர விபத்து...! - 20 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


கோவையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, இன்று அதிகாலை கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பரபரப்பான விபத்தில் சிக்கியது.அந்த நேரத்தில், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கி இயக்கிய சிமெண்ட் கலவை டேங்கர் லாரியின் பிரேக் அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, லாரியை சாலையோரமாக நிறுத்திய ஓட்டுநர் பழுதை சரிசெய்ய முயன்றார். ஆனால், வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் எச்சரிக்கை சின்னங்கள் எதுவும் அமைக்கப்படாத நிலையில், பின்னால் வேகமாக வந்த ஆம்னி பேருந்து எதிர்பாராத விதமாக டேங்கர் லாரியின் பின்பகுதியில் பலத்த வேகத்தில் மோதியது.

இந்த விபத்தின் தாக்கத்தால் பேருந்தின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது. பேருந்தை இயக்கிய உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன், வாகன இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்.

மேலும், பேருந்தில் பயணம் செய்த 8 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட சுமார் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர், நவீன உபகரணங்களின் உதவியுடன் பேருந்தை வெட்டி ஓட்டுநர் சரவணனை உயிருடன் மீட்டனர்.

காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், டேங்கர் லாரி ஓட்டுநர் இசக்கியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cement truck stopped middle road Omni bus hit by sleepy driver Early morning accident Kovilpatti 20 people seriously injured


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->