''தமிழக சட்டப்பேரவை சினிமா தியேட்டர், பிக்பாஸ் ஷோ போன்ற பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது''; சீமான் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


மதுரை ஒத்தக்கடை திருமோகூரில் தமிழ் தேசிய பேரோளி தமிழரசன், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில், நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாம தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசியதாவது;

தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் என்றும், பார்த்து படிக்கும்போது கூட, தவறாக பேசுகின்றனர். கர்ம வீரர் காமராஜரை 'காமவீரர்' என்கிறார்கள். அவர் உயிருடன் இருந்திருந்தால் சட்டபேரவையில் தீக்குளித்து இருப்பார் என்றும், இங்கு சர்க்கார் பட சுவரொட்டியை கிழித்தது தான் சர்வதேச பிரச்சினை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், மதுரை காமராசர் பல்கலை.யை (காமராசர் பல்கலை கல்லூரி) அரசு கல்லூரியாக மாற்றவேண்டும் என வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லாணை பேசுகிறார். பல்கலைக்கும், கல்லூரிக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசும் போன்றவர்களை தற்குறி என்றுதானே கூற முடியும் என்று சாடியுள்ளார்.

மேலும்,  தற்போது தமிழக சட்டப்பேரவை சினிமா தியேட்டர், பிக்பாஸ் ஷோ போன்ற பொழுதுபோக்கு இடமாகமாறி இருக்கிறது என்றும், மேட்டூர் அணை கட்டுவதற்கே அன்னைக்கு ரூ.7 கோடி தான் செலவாகி இருக்கும். ஆனால், அந்த அணையில் தண்ணீர் திறக்க செல்வதற்கு ரூ.7 கோடி செலவிடுகின்றனர் என்று தவெக அரசை விமர்சித்துள்ளார்.

அத்துடன், பூலித்தேவன் போன்ற அனைத்து முக்கிய தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தும் ஒரே அரசியல் இயக்கம் நாம் (நாம் தமிழக கட்சி) மட்டுமே . நாம் வீசும் வலை குளம், குட்டை அல்ல, கடலில் வீசுகிறோம்.

நாம் சாதி, மத அரசியல் செய்யவில்லை. கன்னடர்கள் காவிரிக்கு எதிராக பேசுகின்றனர். தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் காவிரி பற்றி பேசவில்லை என்று குற்றம் சுமத்தியதோடு, கர்நாடகாவில் 03 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி கேட்க நாதியில்லை. நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என நினைக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், கரூரில் நடிகரை பார்க்க வந்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம், முதல்வரான பிறகு அரசு வேலை வழங்கியுள்ளனர். முதல்வர் ஆகவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இது என்ன ஆட்சி முறை. அரசு தேர்வாணையம் மூலம் தேர்வெழுதி 70 ஆயிரம் பேர் வேலையின்றி வெளியில் காத்திருக்கின்றனர். கரூரில் இறந்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை என்றால் விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டில் இறந்தவர்களுக்கு ஏன் அரசு வேலை தரவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கரூர் சம்பவம் குறித்து சிபிஐ 3 முறை விஜய்யை விசாரணைக்கு அழைத்தது. விசாரணையில் என்ன நடந்தது என்பதை ஏன் விஜய் சொல்லவில்லை என்றும், நீட் தேர்வு இன்றி ஏற்கெனவே இருந்த தேர்வு முறை சரியாகவே இருந்தது. பழைய மருத்துவர்களிடமே சிகிச்சை பெறுகின்றனர். நீட் தேர்வில் படித்து வரும் மருத்துவர்களிடம் பெரும்பாலும் மக்கள் சிகிச்சை பெறுவதில்லை. பிரதமர் மோடியும் பழைய மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீட் என்பது ஏமாற்று வேலை. அமெரிக்காவிலுள்ள தனியார் முதலாளிகள் நீட் தேர்வை நடத்துகின்றனர். இது பற்றி நாங்கள் மட்டுமே கேள்வி எழுப்புகிறோம். அவதூறுக்கு பிறந்த குழந்தைகளின் பேச்சுக்கு நாம் செவி சாய்க்காமல் பொறுத்து இருந்து நமது இலக்கை அடையவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman criticizes that the Tamil Nadu Legislative Assembly has become like the Bigg Boss show


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->