6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த விதிமுறை! 4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவால் அதிரும் தமிழக அரசியல்...! - என்ன நடக்கப்போகிறது...? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகள் தொடர்பான விரிவான அறிக்கையை மாநில தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சட்டப்பேரவை செயலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காலியாக இருந்த நிலையில், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ கயல்விழி செல்வராஜ், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் அம்பை தொகுதி எம்.எல்.ஏ இசக்கிசுப்பையா ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதன் மூலம் மேலும் நான்கு தொகுதிகள் காலியானதால், தற்போது மொத்தம் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால், ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறையாகும்.

இதனால், திருச்சி கிழக்கு தொகுதியை சேர்த்து மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும், பதவி விலகிய நான்கு எம்.எல்.ஏக்களும் தற்போது தவெக கட்சியில் இணைந்திருப்பது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elections held within 6 months Tamil Nadu politics shaken by resignation 4 MLAs What going happen


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->