அட்டகாசம் செய்யும் பிராங்க் வீடியோக்கள்....சேனல்களை நீக்க கோரி புகார்..!  - Seithipunal
Seithipunal


சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனல்களை முடக்கி, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரோகித் என்பவர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், முதியோர்கள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் வகையில் சில யூடியூப் சேனல்கள் பிராங்க் வீடியோக்கள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். 

இதனால், தமிழ் கலாச்சாரம் சீரழிந்து இருப்பதாகவும், பலர் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவதாகவும், இதுபோன்ற சேனல்களை உடனடியாக நீக்கி சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prank videos channels Complaint to delete


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal