#பெரம்பலூர் | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிறிஸ்துவ பாதிரியார் கைது!
prampalur chirst father arrested for child abuse case
பெரம்பலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிறிஸ்துவ பாதிரியார் உள்ளிட்ட இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோனேரி பாளையம் பெந்தகோஸ்தே கிறிஸ்துவ திருச்சபை பாதிரியாராக பணியாற்றி வரும் வேலாயுதம் ஸ்டீபன் மற்றும் தர்மதுரை ஆகியோரை போக்க சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் சில மாவட்ட செய்திகள் :
கடலூர் மாவட்டம் : விருதாச்சலம் அருகே நகை பறிப்பு சம்பவத்தின் போது பைக்கில் இருந்து கீழே விழுந்ததில், பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மகனுடன் பைக்கில் சென்று அமுதா என்பவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஐந்து சவரன் தங்க நகையை பறிக்க முயற்சி செய்தனர்.
அப்போது பைக்கில் இருந்து கீழே விழுந்த அமுதா, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் : வேதாரண்யம் காவல் ஆய்வாளர் குணசேகரனை நாகை ஆயுதப் படைக்கு மாற்றி டிஐஜி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சாமி ராஜேந்திரன் என்பவரை தாக்கிய புகாரில் காவல் ஆய்வாளர் குணசேகரன் மீது டிஐஜி ஜெயச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
English Summary
prampalur chirst father arrested for child abuse case