வெளியூர் சென்ற நேரத்தில் கைவரிசை காட்டிய நபர்கள்...! வேப்பூரில் இரட்டை வீட்டு கொள்ளை...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமலிங்கம், குடும்பத்தினருடன் சில நாட்கள் வெளியூருக்குச் சென்றிருந்தார். பயணம் முடிந்து வீடு திரும்பிய அவர், உடைந்த கதவுடன் வீட்டை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து கொள்ளையர்கள் அதில் பாதுகாப்பாக வைத்திருந்த ரூ.2.5 லட்சம் ரொக்கம் மற்றும் 13 கிராம் தங்க நகைகளை தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே, அதே பகுதியில் உள்ள பக்கத்து வீட்டைச் சேர்ந்த சித்ரா என்பவரின் வீட்டிலும் இதேபோன்ற திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

அவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, வெள்ளி அரைஞான் கயிறு மற்றும் 2 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவங்கள், வேப்பூர் பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், திருடர்களை வலைவீசி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Individuals who struck while residents away Double house burglary Veppur What happened


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->