சென்னையில் ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் மின் தடை: எந்தெந்தப் பகுதிகள்? முழு விவரம்!
Power Cut Scheduled Across Key Areas in Chennai on August 3 and 4
மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாகச் சென்னையில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிப்பிட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி மின்தடை பகுதிகள்
கொரட்டூர்: மண்ணூர்பேட்டை, TNHB, சென்ட்ரல் அவென்யூ, MTH சாலை, RS சாலை, முகப்பேர் சாலை, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயல் சாலை.
அடையாறு: இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வ.உ.சி. நகர் (1 முதல் 4 தெருக்கள்), ஸ்ரீனிவாச நகர், முருகு நகர், கோமதி நகர்.
தாம்பரம்: பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, VGN, நித்யானந்தம் நகர், பெருமாள் கோவில் தெரு, GST சாலை மற்றும் இரும்புலியூர்.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி மின்தடை பகுதிகள்
வேளச்சேரி & அடையாறு: சாரதி நகர், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை, காந்தி மண்டபம் சாலை, சர்தார் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், தரமணி, சின்னமலை, KP நகர், பக்தவத்சலம் நகர்.
முடிச்சூர் & மேடவாக்கம்: அஷ்டலட்சுமி நகர், மணிமங்கலம் பிரதான சாலை, பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், நூக்கம்பாளையம் சாலை, பள்ளிக்கரணை, சாய் பாலாஜி நகர்.
செயின்ட் தாமஸ் மவுண்ட்: மவுண்ட் பூந்தமல்லி சாலை, கணபதி காலனி, மீனம்பாக்கம், MKN சாலை, டிபன்ஸ் காலனி, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி பகுதி.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் வழக்கம்போலச் சீரமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Power Cut Scheduled Across Key Areas in Chennai on August 3 and 4