நாகை வேளாங்கண்ணி திருவிழாவில் விபத்து; ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறியதில் இருவர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம்- வேளாங்கண்ணி  புனித ஆரோக்கிய அன்னை திருவிழாவில் பட்டாசு தீப்பொறி பட்டு ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் சென்னையை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். இந்த பேராலயத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி செப்டம்பர் 08-ஆ =ம் தேதி அன்னையின் பிறப்பு விழாவுடன் நிறைவு பெறும். விழா நாட்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருவர்.

அதன்படி,  இன்று வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது பட்டாசு தீப்பொறி பட்டதும் அலங்காரத்துக்காக வைக்கப்பட்ட ஹீலியம் பலூன்கள் அனைத்தும் சத்தத்துடன் வெடித்துச் சிதறின. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நிலையில் ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹீலியம் பலூன்கள் வெடித்து சிதறியதில் சென்னையைச் சேர்ந்த கலைச்செல்வன், ரமேஷ் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two people seriously injured after helium balloons burst during Nagai Velankanni festival


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->