மே மாதம் மின் தட்டுப்பாடு அபாயம்: தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சம் - சமாளிக்க மின் வாரியம் அதிரடி திட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வரும் நிலையில், வரும் மே மாதம் முதல் மாநிலத்தின் மின் தேவை உச்சத்தைத் தொடும் என்றும், இதனால் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய மின் துறை எச்சரித்துள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளதால், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி பயன்பாடு பன்மடங்கு அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம் என பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த செய்தியில் அடிப்படையில், மத்திய மின் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த மின் தேவை கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்தை விட, 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது.

தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த தேவை: 69,934 மெகாவாட்டிலிருந்து 73,805 மெகாவாட்டாக உயர்வு.
தமிழகத்தின் பங்களிப்பு: சுமார் 19,822 மெகாவாட் தேவையுடன் தென் மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி தமிழகத்தின் மின் தேவை வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சமாக 21,060 மெகாவாட்டைத் தொட்டு சாதனை படைத்தது. வழக்கமான நாட்களில் 16,000 மெகாவாட்டாக இருக்கும் தேவை, தற்போது நிலவும் அனல் காற்றால் மிகவேகமாக அதிகரித்து வருகிறது.

மின் வாரியத்தின் தற்காப்பு நடவடிக்கைகள்
வரும் மே 4-ம் தேதி 'அக்னி நட்சத்திரம்' தொடங்க உள்ள நிலையில், மின் தேவையைச் சமாளிக்கத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மே மாதத்தில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையை முன்கூட்டியே மதிப்பிட்டுள்ள அதிகாரிகள், அதனைச் சரிசெய்ய கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தை வாங்குவது மற்றும் காற்றாலை மின் உற்பத்தியைப் பயன்படுத்துவது போன்ற வழிமுறைகள் மூலம் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். கோடையின் வெப்பத்தை விட, மின் கட்டணத்தின் வெப்பம் உயராமல் இருக்க விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியமாகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power Crisis Looming Tamil Nadu Faces Record Demand as Summer Heat Intensifies


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->