நெல்லையில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான மாற்று தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் வரலாறு காணாத மழை பெய்தது. 

இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதுடன் அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும், வட மாவட்டங்களில் மீட்புப்பணி நடைபெற்று இயல்பு நிலை திரும்பியதால், தேர்வு தேதியை மாற்றி ஒருவழியாக நடத்தி முடிக்கப்பட்டது. 

ஆனால் தென் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் தேர்வுகளை நடத்த முடியவில்லை. 
மேலும், அரையாண்டு தேர்வு விடுமுறையும் வந்ததால் மற்ற பள்ளிகளை போலவே விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதாவது 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

postpond halh yearly exam date announce in tirunelveli


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->