காது கேளாதோருக்கான முதுகலை படிப்பு விண்ணப்பிப்பது எப்படி.? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
Postgraduate Studies for the Deaf Today is the last day to apply
சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதோருக்கு பிரத்யேகமாக முதுகலைப் படிப்பு இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காது கேளாதோருக்கான முதுகலை படிப்பில் சேர இன்றே (செப்டம்பர் 23ஆம் தேதி) கடைசி நாளாகும்.
இது குறித்து மாநில கல்வியின் வணிகவியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், செவித்திறன் குறையுடைய மாணவ மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இன்று (செப்டம்பர் 23ஆம் தேதி) மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய 9444612506, 9841427532 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Postgraduate Studies for the Deaf Today is the last day to apply