தமிழக அரசு சார்பில் 3184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்! - Seithipunal
Seithipunal


2024 பொங்கல் பண்டிகையை ஒட்டி 3184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு, மீட்பு துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணி துறைகளில் பணியாற்றும் பணியாளர்களின் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரிக்கும் விதமாக பொங்கல் திருநாளன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டும் காவல்துறையில் காவலர், காவலர் நிலை 1, தலைமை காவலர், சிறப்பு சார்பு ஆய்வாளர், போன்ற 3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. 

மேலும் தீயணைப்பு மீட்பு பணிகள், இயந்திர கம்மியர் போட்டி ஆகிய நிலைகளில் 119 அலுவலர்களுக்கும் இந்த பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் பதக்கங்கள் பெறுபவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 400 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும். 

காவல் வானொலி பிரிவு, மோப்பநாய் படை காவல், புகைப்பட கலைஞர்கள் ஆகிய பிரிவுகளில் இரண்டு நபர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதலமைச்சரின் 'காவல் தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம்' வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 

பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு அவர்களின் நிலைகளுக்கு தக்கவாறு சிறப்பு தொகை வழங்கப்படும். பின்னர் அனைவருக்கும் பழக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal medal 3184 policemen Tamil Nadu government


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->