பொங்கல் பண்டிகை: 12-ந் தேதியிலிருந்து ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! 
                                    
                                    
                                   Pongal Festival Rail ticket booking starts from 12th
 
                                 
                               
                                
                                      
                                            வருடம் ஒவ்வொரு முறை  தீபாவளி, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைகளை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வார்கள்.
ரெயிலில் பயணிகள் வசதியாக செல்லவும், பின்னர் கூட்ட நெரிசலிலிருந்து தவிர்க்க 120 நாட்களுக்கு முன்பே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும்.
இந்நிலையில், அடுத்த வருடம் ஜனவரி 13-ந்தேதி அன்று போகி பண்டிகை, 14-ந்தேதி அன்று பொங்கல் பண்டிகை, 15-ந்தேதி மாட்டுப் பொங்கல் மற்றும்16-ந்தேதி அன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, வரும் 12-ந்தேதி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 10 அன்று பயணம் செய்ய விரும்புவோர் செப் 12-ந்தேதியும், ஜனவரி 11-ந் தேதி அன்று பயணம் செய்வோர் செப் 13-ந்தேதி அன்றும், ஜனவரி 12-ந்தேதி அன்று பயணம் செய்வோர் வரும் 14-ந்தேதி அன்று டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு பயணம் மேற்கொள்ளலாம்,
பின்னர், போகி பண்டிகை முன்னிட்டு ஜனவரி 13-ந்தேதியில்  பயணம் செய்ய விரும்புவோர் வரும் செப் 15-ந்தேதி அன்று முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம்.
மேலும், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு செய்யும் மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என  தெற்கு ரெயில்வே தகவல் அறிவித்துள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Pongal Festival Rail ticket booking starts from 12th