தூத்துக்குடியில் காவலர்கள் அதிரடி! 14 கிலோ புகையிலை, கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல்...! - 2 பேர் சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், முத்தையாபுரம் காவலர்கள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான காவலர்கள் நேற்று முன்தினம் முள்ளக்காடு ராஜீவ்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இரண்டு பேரை காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் முத்தையாபுரத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் (42) மற்றும் சாயர்புரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து இருவரையும் காவலர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், ரூ.85 ஆயிரம் ரொக்கத் தொகையையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சட்டவிரோத விற்பனைக்கு பின்னால் மேலும் யாரேனும் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பது குறித்து முத்தையாபுரம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police take action Thoothukudi 14 kg tobacco cash seized How did 2 people get caught


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->