முன் விரோதத்தால் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு...! - Seithipunal
Seithipunal


சென்னை விருகம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கும் ஆட்டோ டிரைவர் பரணி என்பவருக்கும் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்கனவே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பரணி நண்பர்களை அழைத்து கொண்டு சேகரை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பரணி மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police searching a man


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->