தீபாவளிக்கு முன் தூத்துக்குடியில் காவல் சோதனை மழை! - சட்டவிரோத பட்டாசு,மதுபான விற்பனைக்கு பூட்டல்...! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்தும் பணியில் காவல்துறையினர் முழு தீவிரத்தில் இறங்கியுள்ளனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்வோர் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களை கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களும் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் விளைவாக, கடந்த 2 நாட்களில் மட்டும் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் மது அருந்தி அமைதிக்கு பங்கம் விளைவித்ததும், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதும் காரணமாக தூத்துக்குடி நகரில் 6 வழக்குகள், ஊரகத்தில் 3, திருச்செந்தூரில் 6, ஸ்ரீவைகுண்டத்தில் 1, விளாத்திகுளத்தில் 5, சாத்தான்குளத்தில் 13 வழக்குகள் என மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஏரல் பகுதியில் உரிமம் இன்றி பட்டாசு சேமித்து வைத்திருந்த ஒருவரையும் காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.மேலும், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீபாவளி முன்பாக காவல்துறை ரோந்து பணிகள் தீவிரமாக தொடரும் என்றும், சட்டவிரோத பட்டாசு மற்றும் மதுபான விற்பனையாளர்கள் மீது எந்த தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police raids in Thoothukudi before Diwali Illegal crackers liquor sales banned


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->