நெல்லை || விபத்தை ஏற்படுத்திவிட்டு வாலிபரிடம் வாக்குவாதம் செய்த போலீசார் - ஆயுதப்படைக்கு மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறை சேர்ந்த காந்தி ராஜன் என்பவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன் படி நேற்று இரவு காந்தி ராஜன் வழக்கம் போல் பணி முடிந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் சென்ற பேருந்து ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டதனால் அந்த பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.

இந்த நிலையில், அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் காந்திரஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காந்திராஜன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது அவர் காரின் முன்பு நின்று கொண்டிருந்த வாலிபர் மீது காரை ஏற்றியுள்ளார். ஆனால், அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் காந்தி ராஜனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து ஆணையர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police officer change to armed forces for accident in nellai


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->