வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டி... பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்... போலீசார் வலைவீச்சு...! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றன.

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மூதாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மாலை 4 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அத்துமீறி மூதாட்டி வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். ஆனால் பொதுமக்களிடம் இருந்து அவர் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police looking for youth due to Attempted rape a Oldwoman in Vellore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->