திருப்பத்தூர் || தங்கையை காதலித்த ஆத்திரம் - வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் முரளி. கூலி வேலை செய்து வரும் இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த பதினேழு வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், முரளி கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன் அடிப்படையில் போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டு முரளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும் முரளி மீண்டும் சிறுமியை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் சந்தோஷ், முரளியுடன் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதலில், சந்தோஷ், முரளியை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் முரளி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முரளியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர். தங்கையை காதலித்த வாலிபரை அண்ணன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation youth murder case in thirupathur vaniyambadi


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->