நிதி நிறுவன அதிபர் மர்ம மரணம்..!! விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர்...!! - Seithipunal
Seithipunal


மர்மமான முறையில் பைனான்சியர் இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆர்.எம் காலனி பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் கவுன்சிலர் மகன் பிரபாகரன். இவருக்கு திருமணமாகி இரு பெண்குழந்தைகள் உள்ளனர்.

பிரபாகரனுக்கு  அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாட்டால் தினம் சண்டை வந்துள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன் அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால், பிரபாகரன் மட்டும் அவரது வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த காவல்துறை அவரின் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது பிரபாகரன் ஒரு அறையில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதனை அடுத்து அவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

 இதனை அடுத்து அவர் கொலை செய்யபட்டார? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation about mistory Death of bussiness man


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal