விடுப்பு தர மறுத்த உயர் அதிகாரி - பரிதாபமாக பறிபோன காவலரின் உயிர்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள வரவனை கிராமம் பகுதியை சேர்ந்தவர் காவலர் பாலமுருகன். சங்கர் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் இவர் குன்றத்தூர் மணிகண்டன் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பாலமுருகன் தனது மனைவி உடன் கரூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.

அங்கு இருவரும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், கார் உளுந்தூர்பேட்டை பாலி கிராமம் அருகே வரும் போது திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவலர் பாலமுருகன் அவரது மனைவி வினோதினி உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதைப்பார்த்த அப்பகுதியாக வந்த வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் படி, போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், காவலர் பாலமுருகனுக்கு வார விடுப்பு வழங்காததால் அவசர அவசரமாக வேலைக்கு வந்த போது சாலை விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், சங்கர் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் எவருக்கும் முறையாக விடுப்பு வழங்குவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாகவே பாலமுருகன் உறவினர் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமென்றும் வாராந்திர விடுமுறை உள்ளது, அதனை உறுதிப்படுத்துமாறும் ஆய்வாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த ஆய்வாளர் சரவணன், உடனடியாக பணிக்கு சேர வேண்டும் என்று கூறி டியூட்டி லிஸ்ட்டை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். 

இதைப்பார்த்த பாலமுருகன் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அவசர அவசரமாக தனது மனைவி வினோதினியை அழைத்துக் கொண்டு காரில் சென்னைக்கு புறப்பட்டு வந்த போது இந்தக் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்துக் குறித்து தகவல் தெரிந்த உடன் சங்கர் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வாட்ஸப் குழுவில் இருந்த டியூட்டி லிஸ்ட்டை டெலிட் செய்து விட்டு பாலமுருகனுக்கு வாராந்திர விடுமுறை கொடுத்ததாக மாற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், காவல் நிலையத்தில் பாலமுருகன் படத்தை வைத்து சக காவலர்கள் அஞ்சலி செலுத்தும் பணியினை மேற்கொண்ட போது, ஆய்வாளர் சரவணன் இங்கு இதெல்லாம் செய்ய கூடாது வெளியே உள்ள போலீஸ் பூத்தில் வைத்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police died with wife in karoor


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->