தாளமுத்துநகரில் காவலர்கள் அதிரடி வேட்டை...! வெங்கடேஷ், ராஜேஷ் உள்பட 4 பேர் கஞ்சாவுடன் அதிரடி கைது...! - பைக்குகள், ரொக்கம் பறிமுதல்...!
Police conduct sting operation Thalamuthunagar Venkatesh Rajesh and 4 others arrested ganja Bikes cash seized
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் பகுதியில் நேற்று காவலர்கள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனங்களில் வந்த சில இளைஞர்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தடைசெய்யப்பட்ட கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (20), அழகேசபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (20), எஸ்.எஸ். மாணிக்கபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (22) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த மாயகணபதி (24) ஆகிய நால்வரையும் காவலர்கள் பிடித்து விசாரணைக்குட்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, ரூ.8 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து, நால்வரையும் கைது செய்துள்ளார். மேலும், கஞ்சா விற்பனை மற்றும் விநியோக வலையமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Police conduct sting operation Thalamuthunagar Venkatesh Rajesh and 4 others arrested ganja Bikes cash seized