போதையில் இளம்பெண்ணிடம் ரகளை.,தட்டி கேட்ட கணவனுக்கு அடி உதை..!! மாணவர்களுக்கு வலைவீச்சு..!! - Seithipunal
Seithipunal


மது போதையில் உணவகத்தில் தகராற்றில் ஈடுப்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைகுடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் அசோக் கோபிநாத் என்ற மாணவன் புதியதாக பைக் வாங்கியதால் நண்பர்களுக்கு பார்டி கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து காரைகுடியில் உள்ள உணவகம் ஒன்றில் அவர்கள் உணவருந்த சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற பெண்ணை முகமது சல்மான் என்ற மாணவன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால், பயந்து போன அந்த பெண் தனது கணவரிடம் சென்றுள்ளார். அப்போதும் அந்த பெண்ணிடம் தகாத முறையில் ஆபாச சைகைகள் செய்துள்ளான்.

இதனை கண்ட அந்த பெண்ணின் கணவன் அந்த மாணவனிடம் வாக்குவாத்தில் ஈடுப்பட்டுள்ளார். கஞ்சா போதையில் இருந்த மாணவன் அவரை தாக்க உடன் இருந்த மாணவர்களும் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து ஹோட்டல் ஊழியர்கள்  அவர்களை சமாதானம் செய்து விளக்கி வைத்துள்ளனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என நினைத்து அந்த பெண்ணின் கணவர் இது குறித்து புகார் அளிக்கவில்லை. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

இதனை அடுத்து காலையில் போதை தெளிந்ததும் தங்களின் செல்போனை காணவில்லை என மாணவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த உணவகத்தை தொடர்பு கொண்டு காவல்துறையினர் கேட்ட பின்பு தான் இந்தன் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உணவக உரிமையாளரிடம் புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் மாணவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். படிக்கும் காலத்தில் இளைய தலைமுறையினர் போதைக்கு அடிமையாகி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது வேதனை தரும் விஷயமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are searching for the students involved in the drunken riot


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal