மாற்றுதிறனாளி தொழிலாளி கொடூர கொலை., காவல்துறை விசாரணை..!! சேலத்தில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


தலையில் கல்லை போட்டு மாற்றுதிறனாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், வள்ளுவர் பூங்கா பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் க்.  மாற்றுதிறனாளியான இவர்  அந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் ,நேற்று இரவு வீட்டில் இருந்து கிளம்பியவர் காலைவரை வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், குள்ளம்பட்டி பகுதியில் பிரிவு சாலை அருகே கரடு பகுதியில் கொலை தலையில் கல்லை போட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனை கண்டவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை யார் கொலை செய்தது? அதற்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are investigating a murder in Salem


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal