குவிந்து கிடக்கும் உடல்கள்.. பாதுகாப்பற்ற முறையில் இறுதிக்கடமை.. தேனியில் சோகம்.. மரு. இராமதாஸ் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவக் கல்லூரியில் கொரோனா நோயர் உடல்கள் குவிந்து கிடக்கும் அவலம். பாதுகாப்பாக இறுதிக்கடமைகள் செய்ய நடவடிக்கை தேவை என மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உடல்கள் கிடங்கில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின்  உடல்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும்,  அவற்றை அவர்களின் உறவினர்கள் அடையாளம் கண்டு எடுத்துச் செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. கொரோனா நோயாளிகளின் உடல்கள் பாதுகாப்பின்றி கிடத்தி வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதுகாப்பான முறையில் எரிக்கவோ, புதைக்கவோ பட வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் கூட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை  உறவினர்களிடம் ஒப்படைக்கக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது. அத்தகைய சூழலில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்களே தேடிக்கண்டுபிடிக்கும் அளவுக்கு குவித்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது நோய்ப்பரவலுக்கு வழி வகுக்கும்.

உடல்கள் கிடங்கில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லை என்பதால் தான் உடல்களை அடையாளம் காட்ட உறவினர்கள் அழைக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறுவது  ஏற்றுக்கொள்ள முடியாத  வாதம் ஆகும். கொரோனா நோயாளிகளின் விவரம் அவர்களின் உடல்கள் மீது இருக்கும் என்பதால் யாரும் அடையாளம் காட்டத்தேவையில்லை. யாருடைய உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்கக்கூடாது. அரசு கண்காணிப்பில் தான் உடல்களுக்கு இறுதி மரியாதை செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக கொரோனா நோயாளிகளின் உடல்களை குப்பைகளைப் போல கிடத்தி வைத்திருப்பது பேரவலம் ஆகும். இந்த அவலத்திற்கு உடனடியாக அரசு முடிவு கட்ட வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Request to TN Govt about Theni GH Hospital Corona Patient Issue 1 June 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->