பாமக தலைவராக மருத்துவர் அன்புமணி நடத்திய முதல் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!  - Seithipunal
Seithipunal


சட்டமன்றத்தில் 2வது முறையாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், இன்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம், ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்க வழிவகை செய்யப்படுகிறது. 

முன்னதாக இன்று காலை சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதும், ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கிறார் என திமுகவினர் பெருமையாக பதிவிட்டு வருகின்றனர்.

இன்று தமிழக சட்டப்பேரவை ஆளுநரை செயல்பட வைத்தது உண்மை. அதே சமயத்தில் இந்த விவகாரத்தை ஆரம்பம் முதல் கையில் எடுத்து, தமிழக அரசை செயல்படவைத்தது பாமகவும், அதன் தலைவர் அன்புமணி என்று சொன்னால் மிகையாகாது.

இந்த பிரச்சனை தொடர்பாக முதன்முதலில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த அதிமுக ஆட்சியில் இதற்க்கு தடை சட்டம் கொண்டுவர வைத்தது.

பின்னர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம் உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட, பின்னர் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிட்டத்தட்ட 6 மாதங்கள் திமுக அரசு காலம் தாழ்த்தியது.

கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி பாமக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், அடுத்த ஜூன் 10 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார். அன்புமணியின் போராட்டத்தின் போதே, நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அறிவித்தது.

அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் மாதம் தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை மசோதா கொண்டு வந்தது. அந்த மசோதாவை 4 மாதம் கழித்து ஆளுநர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்ப, மீண்டும் நடப்பு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு இன்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

இப்படி பல புள்ளி விவரங்களோடு பாமகவினர் தங்களது இந்த வெற்றியை பெருமையுடன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Celebrate the victory of online Gambling Ban law 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->