புவனகிரி சட்டமன்ற தொகுதி கிராமங்களில், வன்னியர் இட ஒதுக்கீடு விழிப்புணர்வு திண்ணை பிரச்சாரம்..! - Seithipunal
Seithipunal


பாமக மாநில துணை பொதுச்செயலாளர் த. அசோக்குமார் தலைமையிலான பா.ம.கவினர் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டின் பலன் குறித்து விழிப்புணர்வு திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர்.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டின் பலனை கிராமங்கள் தோறும் எடுத்து சொல்லும் விதமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸின் ஆலோசனைப்படி பாட்டாளி மக்கள் கட்சியினர் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. திண்ணை பிரச்சாரங்களில், கூடிய மக்கள் 10.5% உள் ஒதுக்கீடு பெற்றுத் தந்து, அவர்கள் வாழ்வின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மருத்துவர் இராமதாசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். 

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம் தர்மநல்லூர் கிராமம், மும்முடிசோழகன், ஓட்டிமேடு, சிறுவரப்பூர் ஆகிய கிராமங்களில் மாநில துணை பொதுச்செயலாளர் முனைவர் த. அசோக்குமார் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டின் பலன் குறித்து விழிப்புணர்வு திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Ariyalur Deputy Secretary General of State Ashok Kumar Shrine campaign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal